சூர்யாவை அடுத்து 'சார்பாட்டா பரம்பரை' குறித்து கருத்து கூறிய பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித்தின் ’சார்பாட்டா பரம்பரை’ படம் குறித்து ஏற்கனவே பல திரையுலக பிரமுகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சற்றுமுன் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ’சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பாராட்டு தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்தார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சூர்யாவை அடுத்து ஒரு சில நிமிடங்களில் சிவகார்த்திகேயனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சார்பாட்டா பரம்பரை’ குறித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார். ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமை படவேண்டிய படைப்பு என்று அவர் கூறி உள்ளார். இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த படம் மிக அருமையான படம் என்றும் தயவு செய்து யாரும் இந்த படத்தை தவற விட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ’சார்பாட்டா பரம்பரை படத்தை பாராட்டி வரும் நிலையில் தற்போது மாஸ் நடிகர்களும் தொடர்ச்சியாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SarpattaParambarai இந்த படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய படைப்பு?????? ??Hats off to each and everyone involved.. It’s an amazing film pls don’t miss it?? @beemji @arya_offl pic.twitter.com/JHSjf3GF3d
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments