சூர்யா படம் டிராப்.. 2 முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுதா கொங்கரா?

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்தால் ’புறநானூறு’ திரைப்படம் கிட்டதட்ட டிராப் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இரண்டு முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'சூரரை போற்று’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இருவரும் இணையும் அடுத்த படம் ’புறநானூறு’ என்ற அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கால தாமதம் ஆகி கொண்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த படம் டிராப் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுதா கொங்கரா தற்போது ’சூரரை போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படத்தில் விக்ரம் அல்லது சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அனேகமாக விக்ரமுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் தற்போது ’வீரதீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே விக்ரம் மற்றும் சுதா கொங்கரா அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் இந்த படத்திற்காக தான் என்றும் விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஒரே நாளில் 2 படங்கள் அறிவிப்பு.. இரண்டும் சொந்த படங்கள்: ராகவா லாரன்ஸ்

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நாளை இரண்டு புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட போவதாகவும் இரண்டுமே அவரது சொந்த தயாரிப்பு என்றும் அறிவித்துள்ளதை அடுத்து

நடிகை சாயாசிங் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்த நிலையில் அதிரடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது.. நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய முக்கிய தகவல்..!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் 10  ஆண்டு  

2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க இதுவே வழி - VIT விஸ்வநாதன் அறிவுரை

நிறுவனங்களுடன் கூடி மாணவர்கள் திறன் மேம்பாடு செய்வதிலும் விஐடி-யின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் முன்னோடியாக இருந்து செயல்பட்டு வருகிறார்” என்று பிங்காம்டன் பல்கலைக்கழகத் தலைவர் ஹார்வி ஸ்டெங்கர் கூறினார்.

குடும்ப தொழில் முறையை அடுத்த தலைமுறையும் எடுத்து நடத்துவதே ஆகசிறந்தது -மாதம்பட்டி ரங்கராஜ்

சவுக்கு கட்டை ,விறகு ,அடுப்பு ,நெருப்பு ,வியர்வை மற்றும் சமையல் இது எல்லாமே என்னுடன் எனக்குள் இணைந்த ஒன்று ஆகும்.எனது அப்பா சமைக்கும் காலத்தில் ஆரம்பத்திலேயே விறகில் தான் சமைத்தார்...