சூர்யாவை அடுத்து ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு கார்த்தி கண்டனம்!

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய ஒளிப்பதிவு வரைவு சட்டத்திற்கு திரையுலகினர் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல... என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவை அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்தத்திற்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவை அடுத்து அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தியும், புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரு படத்தின் தணிக்கை சான்றிதழை எந்த நேரத்திலும் ரத்து செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா வணிக வாய்ப்புகளையும் தொழில் துறையும் கடுமையாக பாதிக்கும். மேலும் திருட்டுத்தனத்தை தடுப்பதற்கான நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றாலும் நாகரீக சமூகத்தில் கருத்து சுதந்திரத்தை நெறிப்பது விரும்பத்தகாத ஒன்று’ என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

சாதியை இழிவுபடுத்தி பேசிய டிக்டாக் சூர்யா...! இயக்கத்தினர் புகார்..காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா...?

தங்களது சாதி குறித்து இழிவுபடுத்தி பேசியதாக, ரவுடி பேபி சூர்யா மீது "குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தினர்' காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குறிப்பிட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில், குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், நீலகிரி, சிவகங்கை மற்றும் திருப்பத்தூர்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலம்: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

உலகநாயகன் கமலஹாசன் நடிக்கவிருக்கும் 'விக்ரம்' படம் குறித்த தகவல்களை அவ்வப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

ஐஐடி மெட்ராஸ் அழிந்தால் என்ன...? பீட்டர் அல்போன்ஸ் காட்டம்...!

சாதிபேதமற்ற கல்வியை முடியாத IIT மெட்ராஸ் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? என, பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் காட்டமாக கூறியுள்ளார்.

எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் கலைஞர் காலமானார்: தெருக்குரல் அறிவு உருக்கமான இரங்கல்!

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருகுரல் அறிவு உள்பட பலர் பாடிய என்ஜாய் என்ஜாய் என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும்