சூர்யாவின் 'புறநானூறு' டிராப்.. சுதா கொங்கராவின் அடுத்த பட ஹீரோ இவரா?

  • IndiaGlitz, [Monday,June 17 2024]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ என்ற திரைப்படம் உருவாகியிருந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென இந்த படம் ட்ராப் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கிய நிலையில் சுதா கொங்கராவின், ’சூரரை போற்று’ ஹிந்தி படத்தை முடித்தவுடன் அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் அல்லது சாந்தி டாக்கீஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் வரும் நவம்பர் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரை போற்று’ இந்தி ரீமேக் படமான ‘சர்ஃபிரா’ வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைத்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்.. திவால் என அறிவிக்கப்படுவாரா?

அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைத்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர் தன்னிடம் சொத்து இல்லை என்றால் திவால் ஆனவர் என்று அறிவிக்கலாம் என்றும் நீதிபதி கூறி இருப்பது

நவபாஷாணத்தின் அற்புத ரகசியங்கள் - ஆன்மீகக்ளிட்ஸில் ஞானகுரு சிவா விளக்கம்

ஆன்மீக சிந்தனையாளர் ஞானகுரு சிவா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, நவபாஷாணம் என்ற ரகசியமான உலகம் குறித்த பல கேள்விகளுக்கு விடை அளித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

2024ன் அதிக ஓப்பனிங் வசூல்.. 'மகாராஜா' தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் வசூல் 'மகாராஜா' திரைப்படம் தான் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

ரூ.6 கோடி கேட்டு மிரட்டியதாக தயாரிப்பாளர் புகார்.. அவதூறு வழக்கு தொடர்ந்த  பிரபல நடிகை..!

நடிகை தன்னிடம் ஆறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ள நிலையில் அவர் மீது நடிகை அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதிகாலையில் திருப்பதிக்கு வந்த அஜித்.. ரசிகர் கொடுத்த மறக்க முடியாத பரிசு..!

இன்று அதிகாலை நடிகர் அஜித் திருப்பதி வந்த நிலையில் அவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த பரிசு மறக்க முடியாததாக இருக்கும் என கருதப்படுகிறது.