'சூர்யா 45' படம் மட்டுமல்ல.. இன்னொரு பிரபலம் படத்திலும் கமிட் ஆன 'லப்பர் பந்து' நடிகை..!
- IndiaGlitz, [Wednesday,December 18 2024]
சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று, வசூலில் சக்கை போடு போட்டது. இந்த நிலையில், இந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் தங்களது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால், அவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 45’ படத்தில், ‘லப்பர் பந்து’படத்தில் நடித்த ஸ்வாசிகா இணைந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில், ’சூர்யா 45 படத்திற்கு அடுத்து, தற்போது சூரி நடிக்க உள்ள ’மாமன்’ படத்தில் அவர் இணைந்துள்ளார்.
சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தில் நடிப்பதாகவும், அவருக்கு டாக்டர் கதாபாத்திரம் என்றும், இது ஒரு குடும்ப சண்டிமெண்ட் அம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவின் சகோதரியாக ஸ்வாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்வாசிகா மகனுக்கும் சூரிக்கும் இடையே உள்ள உறவு தான் இந்த படத்தின் முக்கிய கதையென்றும், அதனால் தான் இந்த படத்துக்கு ’மாமன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
’லப்பர் பந்து’ என்ற ஒரே படத்தின் வெற்றியின் காரணமாக, ஸ்வாசிகாவுக்கு அடுத்தடுத்து பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருவதை அறிந்த ரசிகர்கள், அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.