இப்ப தான் சர்ஜரி முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ள இந்த ஆட்டமா? டிடி வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

விஜய் டிவி பிரபலம் டிடிக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தின் 'மனசிலாயோ' பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதைத் தொடர்ந்து, இந்த வீடியோக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது, இதைப் தொகுத்து வழங்கியவர் டிடி என்பது அனைவரும் அறிந்திருக்கும்.

இது குறித்து, டிடி தனது சமூக வலைதளத்தில், 'சர்ஜரி நடைபெற்ற பின்னர் நான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான். நேராக தலைவரை பார்த்து, அவரிடம் ஆசி பெற்றது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற மஞ்சு வாரியர் பாடலுக்கு முடிந்த வரை என்னால் நடனமாடியுள்ளேன்,' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவான சில மணி நேரங்களில் ஏராளமான லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டிடி முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும், '10 ஆண்டுகளில் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இதுவே கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,' என்றும் சமீபத்தில் டிடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மணிமேகலை Vs ப்ரியங்கா, யார் வேணா என்ன வேணாம் பேசலாம்னு ஆயிடுச்சு... வெங்கடேஷ் பட்

பிரபல சமயல் கலைஞரும், குக்வித் கோமாளியின் நடுவர்களின் ஓருவருமான வெங்கடேஷ் பட் " வீடியோ போட்ட வயசானவரை செருப்பால அடிக்கணும், சோசியல் மீடியா ரொம்ப அசிங்கம் ஆயிடுச்சு" என காட்டமாக பேசியுள்ளார்.

நயன்தாராவின் இதயம்: அன்புடன் கொடுத்த முத்த புகைப்படம் வைரல்!

நடிகை நயன்தாரா 'மை ஹார்ட்' என்னும் கேப்ஷனுடன், தனது அன்பு மகனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகி சுசித்ரா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரபல நடிகை.. என்ன காரணம்?

பாடகி சுசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும்,  அந்த வீடியோக்களில் பழம்பெரும் திரையுலக பிரபலங்கள்

சுயநலவாதிகள்.. விவாகரத்து செய்பவர்கள் குறித்து நடிகை குஷ்புவின் சாட்டையடி பதிவு..!

திரை உலகில் விவாகரத்து செய்யும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபகாலமாக தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோர்

'கூலி' 'ஜெயிலர் 2' படங்களை அடுத்து ரஜினியின் அடுத்த படம்.. இயக்குவது இந்த பிரபலமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது "வேட்டையன்" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.