close
Choose your channels

இப்ப தான் சர்ஜரி முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ள இந்த ஆட்டமா? டிடி வெளியிட்ட வீடியோ..!

Sunday, September 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலம் டிடிக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தின் 'மனசிலாயோ' பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதைத் தொடர்ந்து, இந்த வீடியோக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது, இதைப் தொகுத்து வழங்கியவர் டிடி என்பது அனைவரும் அறிந்திருக்கும்.

இது குறித்து, டிடி தனது சமூக வலைதளத்தில், 'சர்ஜரி நடைபெற்ற பின்னர் நான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான். நேராக தலைவரை பார்த்து, அவரிடம் ஆசி பெற்றது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற மஞ்சு வாரியர் பாடலுக்கு முடிந்த வரை என்னால் நடனமாடியுள்ளேன்,' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவான சில மணி நேரங்களில் ஏராளமான லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டிடி முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும், '10 ஆண்டுகளில் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இதுவே கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,' என்றும் சமீபத்தில் டிடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment