சர்ஜரி முடிந்த அடுத்த நாளே அஜித் செய்த வேலையை பாருங்க.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,March 10 2024]

பொதுவாக சர்ஜரி செய்தவர்கள் அடுத்த சில நாட்களுக்கு முழு ஓய்வு எடுப்பார்கள் என்பதும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் சமீபத்தில் காதுக்கு கீழ் நரம்பு வீக்கம் இருந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் அஜித், அடுத்த நாளே தனது மகன் படிக்கும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் சமீபத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் காதுக்கு கீழே நரம்பில் லேசான வீக்கம் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. இதனை அடுத்து சிறிய அறுவை சிகிச்சை அஜித்துக்கு செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்தபின் அஜித் முழு ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அவரது மகன் படிக்கும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மனைவி ஷாலினி உடன் வந்து உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சர்ஜரி செய்த அடுத்த நாளே அஜித் வெளியே வந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த வாரம் அஜித் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.