கோலிவுட்டை நோக்கி வரும் ஹாலிவுட் நடிகைகள்

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

பத்து வருடங்களுக்கு முன் கோலிவுட் என்ற ஒரு திரையுலகம் இருந்ததே ஹாலிவுட் கலைஞர்களுக்கு தெரியாது. இந்திய படங்கள் என்றாலே இந்தி படங்கள் மட்டுமே என்று அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது 'பாகுபலி', '2.0' போன்ற படங்கள் ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே ஹாலிவுட்டில் கவர்ச்சியாக நடித்த சன்னிலியோன் கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் நடித்து வந்த நிலையில் தற்போது 'வீரமாதேவி' என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சன்னிலியோனை தொடர்ந்து தற்போது இன்னொரு ஹாலிவுட் நடிகை கோலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அவர்தான் மியா ராய் லியோன்

விமல் - ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.

ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் இவர் தற்போது தமிழில் அறிமுகமாகி கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார். இந்த படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

More News

இப்படி ஒரு ரிகார்டிங் வேர்ல்டிலேயே நடந்ததில்லை: 'மரண மாஸ்' தலைவர் குத்து குறித்து அனிருத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ரஜினியின் ரசிகர்களுக்கு வெளிவரவுள்ளது என்பது தெரிந்ததே

சென்னை மெரீனாவில் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம், ஒருசில மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் சிறிய அளவில் ஆரம்பமானது.

விஜய்சேதுபதியின் சிலையை திறந்து வைத்த பழம்பெரும் இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள நிலையில் அவர் நடித்த 25வது படமான 'சீதக்காதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.

'2.0' படத்தை சிம்பு எங்கே பார்த்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்

ரஜினியின் '2.0' வசூல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் தகவல்

ரஜினியின் '2.0' குறித்த பல தகவல்களை அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.