சுசிலீக்ஸ் போல் ஸ்ரீலீக்ஸ்: பிரபல நடிகர்கள் கலக்கம்

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

பிரபல பாடகி சுசித்ராவின் சமூகவலைத்தள பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட்டில் ஏற்படுத்திய பரபரப்பு அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இதேபோன்று தற்போது பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி என்பவர் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புகாக படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள் அதிகரித்து வருவதாகவும், அத்தகையவர்களின் முகத்திரையை கிழிக்க போவதாகவும் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் திரையுலகில் தன்னை மோசம் செய்தவர்களின் பெயர்களையும் ஒரு தனியார் டிவி சேனல் மூலம் தோலுரிக்க போவதாக அவர் கூறியிருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஸ்ரீரெட்டியுடன் பல முன்னணி நடிகர்கள் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் வெளிவரும் குண்டுகள் எத்தனை பேரை தாக்கப்போகின்றதோ என்று டோலிவுட் கலக்கத்தில் உள்ளது.