'சர்தார்' வெற்றியை அடுத்து படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு.. கார்த்தி ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபாவளி விருந்தாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ படத்தை அடுத்து கார்த்திக்கு மேலும் ஒரு வெற்றி படமாக ’சர்தார்’ படம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ’சர்தார்’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் பிஎஸ் மித்ரன், நடிகர் கார்த்திக் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே முதல் பாகத்தில் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீட் உள்ளதால் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பு உறுதியாகியுள்ளது. ’சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கார்த்தி நடித்த ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2ஆம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் ’சர்தார்’ படமும் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.
#Sardar ??
— Prince Pictures (@Prince_Pictures) October 25, 2022
Once a spy, always a spy!
Mission starts soon!!#Sardar2 ????@Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @lakku76 @RaashiiKhanna @rajishavijayan @ChunkyThePanday @george_dop @AntonyLRuben @dhilipaction @kirubakaran_AKR @DuraiKv pic.twitter.com/rVu5IxGRZp
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments