தந்தை-மகனை ஒன்று சேர்த்த ஸ்ரீதேவியின் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் காரணமாக அவரது கணவர் போனிகபூரும், அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜூன் கபூரும் இணைந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 1983ஆம் ஆண்டு மோனம் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஜூன் கபூர் மற்றும் அன்ஷூலா ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மீதான காதல் காரணமாக போனிகபூர் தனது மனைவி மோனாவை 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பின்னர் அதே ஆண்டில் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். அப்போது அர்ஜுன்கபூரூக்கு 11 வயது மட்டுமே.
சிறுவயதிலேயே தனது தாயை தவிக்கவிட்டு சென்ற போனிகபூர் மீது அர்ஜுன் கபூருக்கு தீராத கோபம் இருந்தது. மேலும் தனது தாயின் வாழ்க்கையை கெடுத்த ஸ்ரீதேவியிடமும் அவர் இதுவரை பேசியதே இல்லை. மேலும் மோனம் மறைவின்போது கூட போனிகபூர் தங்கள் இருவருக்கும் ஆறுதலாக இருந்தது இல்லை என்ற ஆழமான வடு அர்ஜூன் கபூர் மனதில் இருந்தது.
இந்த நிலையில் துபாயில் திடீரென ஸ்ரீதேவி மறைந்ததால் போனிகபூர் மனதளவில் நொறுங்கி போனார். எனவே அவருடைய நிலையை அறிந்து படப்பிடிப்பைகூட ரத்து செய்துவிட்டு துபாய் சென்று தனது தந்தைக்கு ஆறுதலாக இருந்தார் அர்ஜூன் கபூர். மேலும் ஸ்ரீதேவி உயிருடன் இருந்தவரை பேசாமல் இருந்த அர்ஜூன்கபூர், அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் ஏறி கலந்து கொண்டதும் அனைவரையும் வியக்க வைத்தது. தற்போது போனிகபூருக்கும் அவரது இரண்டு மகள்களுக்கும் மிகுந்த ஆறுதலாக அர்ஜூன்கபூர் இருப்பதாகவும், ஸ்ரீதேவியின் மரணம் தந்தை-மகனை இணைத்து வைத்துள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments