இந்துவில் இருந்து முஸ்லீமாக மாறிய ஹன்சிகா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஹன்சிகா நடித்து வரும் 'மஹா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த போஸ்டரில் ஹன்சிகா ஒரு இந்து சாமியார் போன்ற வேடத்தில் புகைபிடிக்கும் வகையில் இருந்தது. இந்த போஸ்டர் ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துவது போல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் ஜமீல், பின்னர் தனது டுவிட்டரில் இதற்கான விளக்கத்தை அளித்தார்.
இந்த நிலையில் ஃபர்ஸ்ட்லுக்கில் இந்து சாமியார் தோற்றத்தில் இருந்த ஹன்சிகா தற்போது செகண்ட் லுக்கில் முஸ்லீம் பெண் தோற்றத்தில் காணப்படுகிறார். தற்போது வெளிவந்துள்ள புதிய போஸ்டரில் முஸ்லீம் மத உடையில் ஹன்சிகா பிரார்த்தனை செய்வது போல் உள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த இயக்குனர் ஜமீல், 'இந்த படத்தின் ஒருசில காட்சிகளில் ஹன்சிகா முஸ்லீம் பெண்ணாக நடிக்கின்றார். எனவே இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது. மற்றபடி எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், அதனையடுத்து முக்கிய காட்சிகளை படமாக்க மலேசியா செல்லவுள்ளதாகவும், இந்த படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் ஜமீல் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments