திடீரென வைரலாகும் 'இறைவி' படத்தின் பாடல்.. எஸ்ஜே சூர்யா வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த ‘இறைவி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகிய நல்ல வெற்றி பெற்றது. இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது ன்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு இந்த படத்தில் இடம்பெற்ற ’காதல் கப்பல்’ என்ற பாடலுக்கு இளம் பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது. இதனை அடுத்து பல திரையுலக மற்றும் சின்னத்திரை உலக பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனம் ஆடினார். குறிப்பாக குக் வித் கோமாளி சுனிதா நடனமாடிய வீடியோவும் வைரல் ஆனது
இந்த நிலையில் இது குறித்து எஸ்ஜே சூர்யா கூறிய போது ’காதல் கப்பல் என்ற பாடல் திடீரென வைரலாகி வருகிறது, அதற்கு முக்கிய காரணம் நாங்கள் கஷ்டப்பட்டோம் என்பதை விட இவ்வளவு இடைவெளிக்கு பிறகு இந்த பாடல் வைரல் ஆனதற்கு அந்த பெண் தான் காரணம். அவர் தனது அறையில் டீசர்ட் ஸ்கர்ட் போட்டுக்கொண்டு ஆடிய நடனம் பயங்கர வைரலாகி அந்த பாடலை தற்போது பிரபலம் ஆகிவிட்டது.
அவருடைய நடனம் மிக அபாரமாக உள்ளது, அவர் தனது ஸ்டைலில் வித்தியாசமாக நடனமாடியதை பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அந்த பாடலை அவர் அவ்வளவு என்ஜாய் பண்ணி நடனம் ஆடினார், மிகப்பெரிய நடன கலைஞர்களை விட அவர் ஆடிய நடனம் மிகவும் நளினமாக இருந்தது. அதை தொடர்ந்து இந்த பாடலை பலரும் வைரல் ஆக்கி வருகின்றனர் இதனால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.
From the man himself! 🥳🤩 @iam_SJSuryah
— Sony Music South (@SonyMusicSouth) April 15, 2023
Here’s the unstoppable #KadhalKappal from #Iraivi ➡️https://t.co/BRfefdqahd#MusicHeals pic.twitter.com/1nfynWM3PX
#trending #kadhalkappal #Tamil #selflove #vibe #love #SameehaMariam #SJSuryah #Iraivi #santoshnarayanan
— SIVA (@siva_tweetss) April 12, 2023
Nee dhaney Raani Nenjukulla ❤️🔥 pic.twitter.com/dK6deUlEXk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com