நிர்மலாதேவியை கைது செய்தது எப்படி?
- IndiaGlitz, [Tuesday,April 17 2018]
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த கணித பேராசிரியை நிர்மலாதேவி, அந்த கல்லூரியில் படித்து வந்த 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்மலாதேவி மீது கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
பெண் போலீசார் உள்பட போலீஸ் படை ஒன்று நிர்மலாதேவி வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதனால் சுமார் 6 மணி நேரம் போலீசார் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் கதவை உடைத்து உள்ளே செல்ல போலீசார் முயற்சித்தபோது, நிர்மலாதேவியின் உறவினர் ஒருவர் கொடுத்த செல்போன் எண்ணில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின் மீடியாக்களை முற்றிலும் வெளியேற்றினால் தான் வெளியே வரத்தயார் என்று நிர்மலாதேவி கூற, அதன்படி மீடியாக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின்னர் வெளியே வந்த நிர்மலாதேவியை கைது செய்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன்பின்னர் அவரிடம் இந்த விவகாரத்தில் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.