ஒரே படத்தில் இணைந்த ஜிப்ரான் - அனிருத் - சிவகார்த்திகேயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் தற்போது விக்ரமின் 'கடாரம் கொண்டான்', பிரபாஸின் 'சாஹோ', 'உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் அவர் இசையமைத்து வரும் படங்களில் ஒன்று 'சிக்ஸர்'.
வைபவ், பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சாச்சி இயக்கி வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்ற 'நீ எங்க வேணா கோச்சிகின்னு' என்ற பாடலை சமீபத்தில் சிவகார்த்திகேயன் பாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது சிவகார்த்திகேயனை அடுத்து இந்த படத்திற்காக இளம் இசைப்புயல் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.
'பா பா பிளாக் ஷீப்' என்று தொடங்கும் இந்த பாடல் அனிருத் குரலில் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த தகவலை ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அனிருத்-ஜிப்ரான் முதல்முறையாக இணைந்துள்ள இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவரவுள்ளது.
It’s a #sixer shot by our @anirudhofficial . Collaborating for the first time & enjoyed every bit. Thanks for lending your voice brother . A rappish quirky EDM song ??#BabaBlacksheep ?? from @actor_vaibhav starring #Sixer coming soon ???? pic.twitter.com/TFCWx5XFTi
— Ghibran (@GhibranOfficial) July 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments