சிவாஜியை அடுத்து கமலுக்கு கிடைத்த சர்வதேச கெளரவம்
- IndiaGlitz, [Monday,August 22 2016]
உலக நாயகன் என்ற பெயருக்கு ஏற்றவாறு கமல்ஹாசன் பல சர்வதேச விருதுகளை குவித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு பிரான்ஸ் அரசின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'செவாலியே' விருது கிடைத்துள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த விருதை பெற்றதை அடுத்து தற்போது மீண்டும் ஒரு தமிழ் நடிகர் இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தூர் கண்ணம்மா'வில் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் சேவை செய்து கமல்ஹாசன் ஏற்கனவே 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் மற்றும் மத்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது செவாலியே விருதும் கிடைத்துள்ளது என்பது அவருக்கு மட்டுமின்றி கோலிவுட் திரையுலகிற்கே ஒரு பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் கமல்ஹாசனின் சிறந்த சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயர்ந்த விருதை பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விரைவில் கமல்ஹாசனுக்கு இந்த விருது அறிவிக்கும் தேதியை பிரான்ஸ் அரசு அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.