சிவாஜி கணேசன், கமல்ஹாசன் பெற்ற உயரிய விருதை பெற்ற டாம் குரூஸ்.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Sunday,July 28 2024]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களுக்கு கிடைத்த உயரிய விருது தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவர்களுக்கும் கிடைத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கடந்த 1995 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் பெற்றார் என்பதும் அதனை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் பெற்றார் என்பது தெரிந்ததே.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மட்டுமின்றி நந்திதா தாஸ் உட்பட சில இந்திய பிரபலங்களும் இந்த விருதை பெற்றுள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பெற்றுள்ளார்.

இந்த விருதை பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் ரச்சிதா டத்தி என்பவரிடமிருந்து டாம் குரூஸ் பெற்றுக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் அரசு கலைத்துறையில் சிறப்பாக சேவை செய்த ஒரு நபரை தேர்வு செய்து செவாலியே விருதை பெற்று வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு டாம் குரூஸ் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.