சிம்ரனை அடுத்து 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான ’அந்தகன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார் தியாகராஜன் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை சிம்ரன், பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் உள்பட பலர் இணைந்தார்கள் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் பிரபல நாயகி ப்ரியா ஆனந்த் இணைந்துள்ளார். இவர் பிரசாந்துக்கு ஜோடியாகவும், ’அந்தாதூன்’ படத்தில் ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரிலும் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ’அந்தாதூன்’ படத்தில் தபு நடித்த கேரக்டரில் தான் சிம்ரன் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, லீலா சாம்சன், மனோபாலா உள்பட பலர் நடிக்கின்றனர். பிரசாந்த் இந்த படத்தில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளி ஆகவும், இசைக் கலைஞராகவும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் ஒரு திரில் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments