சிம்புவை அடுத்து இன்னொரு பிரபல நடிகருடன் கெளதம் கார்த்திக்.. இயக்குனர் இவர்தான்..!

  • IndiaGlitz, [Thursday,April 06 2023]

பிரபல நடிகர் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் வசூலிலும் இந்த படம் திருப்திகரமாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவை அடுத்து இன்னொரு பிரபல ஹீரோவுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான ஆர்யாவுடன் கௌதம் கார்த்திக் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்ஐஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது

இந்த நிலையில் நான் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான ’1947’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது. கௌதம் கார்த்திக் நடிப்பில் பொன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவில் சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் ஒரு சிறு கிராமத்தில் உள்ள மக்கள் வெள்ளையனுக்கு எதிராக எழுச்சி அடைந்து செய்த போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

More News

'தங்கலான்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.

இதெல்லாம் ரொம்ப ஓவர்.. விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்திக்கு ராஷ்மிகாவின் ரியாக்சன்..!

நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிகை ராஷ்மிகா திருமணம் செய்து கொண்டதாகவும் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாகவும் வெளியான செய்திக்கு 'இதெல்லாம் ரொம்ப ஓவர், அதீதமான கற்பனை' என ராஷ்மிகா

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுவா? பிரபல நடிகையுடன் பேச்சுவார்த்தை..!

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை மிஷ்கின் உதவியாளர் புவனேஷ் அர்ஜுனன் என்பவர் இயக்க

'பொன்னியின் செல்வன் 2' ரிலீசுக்கு முன் லைகாவின் மாஸ் திட்டம்.. 'கேஜிஎப்' பாணியா?

 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த  படத்தின் ரிலீஸ்க்கு ஒரு வாரத்திற்கு முன்னர்

ரஜினி-லோகேஷ் படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா? அப்ப 'கைதி 2' என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் தற்போது