ஸ்ருதிஹாசனை அடுத்து பார்த்திபன் அடுத்த படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்..!

  • IndiaGlitz, [Sunday,November 12 2023]

பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’இரவின் நிழல்’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தின் பணிகளை கவனித்து வருகிறார். இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடுகிறார் என்று அறிவித்தார். இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனை அடுத்து இந்த படத்தில் தேசிய விருது வென்ற பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலை பாடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பார்த்திபனின் ’இரவின் நிலவின்’ படத்தில் இடம்பெற்ற ’மாயவா தூயவா’ என்ற பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் பார்த்திபனின் அடுத்த படத்திலும் ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் இந்த பாடலுக்கும் தேசிய விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

பார்த்திபனின் அடுத்த படத்தின் டைட்டில் உட்பட மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.