ஸ்ருதிஹாசன் மட்டுமல்ல.. 'கூலி' படத்தில் இணைந்த 'பிகில்' நடிகை.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக நேற்று ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்ததை அடுத்து இந்த படத்தில் அவர் இணைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இதே படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக ’பிகில்’ நடிகையும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவரும் இந்த படத்தில் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நடிகை ரெபா மோனிகா இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தனது சமூக வலை தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

நடிகை ரெபா மோனிகா, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்திருந்தார் என்பதும் அது மட்டும் இன்றி விஷ்ணு விஷாலின் சில ’எஃப்ஐஆர்’ உட்பட சில தமிழ் படங்களிலும், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.