ஜெயிலரில் ஒரு சிவராஜ்குமார் போல கூலியில் இணைந்த கன்னட நடிகர்.. யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,August 24 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்திருந்த நிலையில் ரஜினியின் அடுத்த படமான ’கூலி’ திரைப்படத்திலும் பிரபல கன்னட நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்பட சிலர் இணைந்தனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா இணைந்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா தமிழில் ’சத்யம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’கூலி’ படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேரக்டரில் முதலில் நாகார்ஜுனா நடிக்க இருந்ததாகவும் அவர் நடிக்க மறுத்ததை அடுத்து உபேந்திரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் சில வெளிமாநில நடிகர்கள் இந்த படத்தில் இணைவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

More News

ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சனிடம் விசாரணை நடந்ததா? அவரே அளித்த விளக்கம்..!

ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் இயக்குனர் நெல்சன் இடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

ஹாட்ஸ்டாரில் ஒரு கோலி சோடா.. இன்று இரவு வெளியாகிறது டிரைலர்..!

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 'கோலி சோடா' என்ற திரைப்படம் வெளியானது என்பதும் அதன் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

தமன்னாவை ராதையாக மாற்றிய பேஷன் டிசைனர்.. கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்..!

வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே ராதை கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள்

அரசியலில் விஜய்க்கு சீனியர் எனது மகன் விஜய பிரபாகரன்.. பிரேமலதா

சமீபத்தில் விஜய், கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நிலையில் அன்றைய தின கலந்துரையாடல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கினார். அவர் கூறியதாவது:

'கோட்' ரன்னிங் டைம் இவ்வளவா? விஜய்யின் முந்தைய படங்களின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் சென்சார் தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்