close
Choose your channels

சரத்குமாரை அடுத்து சசிகலாவை சந்தித்த பழம்பெரும் இயக்குனர்!

Wednesday, February 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சசிகலாவை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து சரத்குமார் கூறியபோது ’நன்றி மறப்பது நன்றன்று என்ற அடிப்படையில்தான் சசிகலாவை நான் சந்தித்தேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறேன் என்பதால் சசிகலாவுடன் நான் நெருக்கமாக இருப்பதால் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டேன் என்று கூறினார்.

மேலும் ராதிகா சரத்குமார் இதுகுறித்து கூறியபோது ’ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தோம் என்று கூறினார்.

இந்த நிலையில் சசிகலா மற்றும் சரத்குமார் சந்திப்பின் பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில் சற்று முன்னர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் சசிகலாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது ’தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்துள்ளார் என்று கூறினார்.

அடுத்தடுத்து 2 திரை உலக பிரபலங்கள் சசிகலாவை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment