இன்று சந்தானம், நாளை கவின்.. அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகள்.. இன்னும் ஒரு வாரத்தில் செம்ம விருந்து..!

  • IndiaGlitz, [Friday,April 26 2024]

வரும் மே 10ஆம் தேதி சந்தானம் நடித்துள்ள ’இங்கு நான் தான் கிங்கு’ மற்றும் கவின் நடித்த ’ஸ்டார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் டிரைலர் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

சந்தானம் நடித்து வரும் ’இங்க நான் தான் கிங்கு’ என்ற படம் மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் காமெடி கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டிரைலரை அனைவரும் ரசித்து பாசிட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இங்க நான் தான் கிங்கு’ என்ற படம் ரிலீஸ் ஆகும் அதே மே 10ஆம் தேதி கவின் நடித்துள்ள ’ஸ்டார்’ என்ற படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாக உள்ளதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நாளை வெளியாக இருக்கும் ட்ரைலருக்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கவின் ஜோடியாக அதிதி பொஹங்கர் நடித்துள்ள ‘ஸ்டார்’ படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.