சமந்தா, ரெஜினாவை அடுத்து ஐட்டம் டான்ஸ் ஆடிய வனிதா: வைரல் வீடியோ

’புஷ்பா’ திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய சமந்தா மற்றும் ’ஆச்சார்யா’ திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய ரெஜினா ஆகியோர்களின் வீடியோக்கள் இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே

இந்நிலையில் சமந்தா, ரெஜினாவை அடுத்து தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றுக்காக நடிகை வனிதா ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். தமிழில் உருவாகி வரும் ‘காத்து’ என்ற திரைப்படத்திற்காக வனிதா ஆடிய இந்த ஐட்டம் டான்ஸ் வீடியோ செம வைரலாகி வருகிறது. காத்து’ திரைப்படத்தை தவசிராஜன் என்பவர் இயக்கி தயாரித்து வருகிறார்.

‘காத்து’ படத்தின் ஐட்டம் டான்ஸ் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வனிதா, ‘இது தனது முதல் ஐட்டம் டான்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார். ’கலரு கோழிக்குஞ்சு’ என்று தொடங்கும் இந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார்.

நடிகை வனிதா தற்போது அனல்காற்று, அந்தகன், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில் இருந்தா போராடு, பிக்-அப் டிராப் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.