சமந்தா சந்தித்த அதே பிரச்சனையை எதிர்கொள்ளும் ரெஜினா!

  • IndiaGlitz, [Thursday,January 13 2022]

சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா டான்ஸ் ஆடிய நிலையில் அவருக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ’ஆச்சார்யா’ படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய நடிகை ரெஜினாவுக்கு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், அந்த படத்தின் வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு ஆந்திராவில் உள்ள ஆண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் இது குறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வழக்கு காரணமாகத்தான் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்றும் கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த ’ஆச்சாரியா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை ரெஜினா டான்ஸ் ஆடியிருந்தார். ‘சானா கஷ்டம்’ என்று தொடங்கும் இந்த பாடலில் டாக்டர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து இருப்பதாகவும் அந்த பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்றும் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக இதுவரை இந்த பாடலை பார்க்காதவர்கள் ’அப்படி என்னதான் இந்த பாடலில் இருக்கிறது’ என்பதை அறிய பாடலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா? அல்லது இந்த பாடலை ஹிட்டாக பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்ற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த நடிகை ஓவியா!

பிரதமர் மோடியின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றுக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு 5 ஆண்டு சிறையா? கலக்கத்தில் ரசிகர்கள்!

செர்பியா நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலியா நாட்டின் விசா தொடர்பான சர்ச்சையில்

2022 ஐபிஎல் எங்கே நடக்கும்? அமீரகத்தை ஓரம்கட்டி பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள்

மீண்டும் தான் யாரென நிரூபித்த கோலி… கேப்டவுனில் நடந்த பரபரப்பு சம்பவங்கள்!

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்

பிரபல மலையாள ஹீரோ பாடிய முதல் தமிழ்ப்பாடல்! வீடியோ வைரல்

மலையாள திரையுலகின் பிரபல இளம் ஹீரோ ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பாடி உள்ள நிலையில் இது குறித்த டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.