'சாஹோ' ரிலீசுக்கு பின் பிரபாஸ் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,August 03 2019]
'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து முடித்திருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'சாஹோ' திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீசுக்கு பின் அவருடைய திருமணம் நடைபெறவிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் மணக்கவிருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த திருமணம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பிரபாஸ் வீட்டோர் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
பிரபாஸூக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் நடைபெறும் என அவரது மாமாவும், பிரபாஸ் திருமண செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று அவருடைய சகோதரியும் ஏற்கனவே கூறியிருப்பதால் இந்த ஆண்டு பிரபாஸின் பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக பிரபாஸுக்கும் நடிகை அனுஷ்காவுக்கும் திருமணம் என வதந்திகள் பரவியதும், இந்த வதந்திக்கு இருவருமே மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது