'சாஹோ' ரிலீசுக்கு பின் பிரபாஸ் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,August 03 2019]

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து முடித்திருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'சாஹோ' திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீசுக்கு பின் அவருடைய திருமணம் நடைபெறவிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் மணக்கவிருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த திருமணம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பிரபாஸ் வீட்டோர் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

பிரபாஸூக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் நடைபெறும் என அவரது மாமாவும், பிரபாஸ் திருமண செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று அவருடைய சகோதரியும் ஏற்கனவே கூறியிருப்பதால் இந்த ஆண்டு பிரபாஸின் பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக பிரபாஸுக்கும் நடிகை அனுஷ்காவுக்கும் திருமணம் என வதந்திகள் பரவியதும், இந்த வதந்திக்கு இருவருமே மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

பிக்பாஸ் தமிழ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக கருதப்பட்ட வனிதா, மீராமிதுன் ஆகியோர் வெளியேறிய பின்னர் இந்த வாரம் வெளியேறும் நபர் யாராக இருக்கும்

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 'இந்தியன் 2' படத்தின் நாயகி!

கமலஹாசன் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் நாயகிகளில் ஒருவரான ரகுல் ப்ரீத்திசிங் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

விஜய் ஆண்டனியின் அடுத்த பட நாயகி குறித்த அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் 'அக்னி சிறகுகள்', 'தமிழரசன்' மற்றும் 'காக்கி'

நீங்களும் சரவணனும் ஒன்றா? உடனே வெளியேறுங்கள் சேரன்: பிரபல இயக்குனர் அறிவுரை

இயக்குநர் சேரன் கடந்த சில வருடங்களாக திரையுலகில் வெற்றி பெறாமல் இருந்தாலும், அவர் ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் என்பதும் அவரது 'ஆட்டோகிராப்' உள்பட பல வெற்றிப் படங்கள்

'ஷோபா' கேரக்டரில் நயன்தாரா நடிக்கும் லவ் திரைப்படம்

நயன்தாரா நடிப்பில் உருவான திகில், சஸ்பென்ஸ் படமான 'கொலையுதிர் காலம்' திரைப்படம் நேற்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில்