'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதையடுத்து எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’வலிமை’ மற்றும் ’ராதே ஷ்யாம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ’ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ’ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த காலங்களில் நாங்கள் எங்களால் முடிந்த அளவு மிக சிறப்பான முறையில் படத்தை ரிலீஸ் செய்த முயற்சி செய்தோம் என்றும் ஆனால் பெருகி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக இந்த படத்தை இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்றும் ’ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
எனவே ’ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் ’வலிமை’ படக்குழுவினர்களிடம் இருந்தும் அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments