'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதியை அடுத்து மற்றொரு மெகா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பெரிய படங்களின் ரிலீஸ் தேதியும் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சிவகார்த்திகேயனின் ‘டான்’ மற்றும் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய திரைப்படங்கள் மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இந்த நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள ’ஆச்சார்யா’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 29 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை அடுத்து மற்றொரு மெகா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து சினிமா ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சிரஞ்சீவி ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தப் படத்தில் ராம்சரண் தேஜாவும் நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் சோனு சூட் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் மணிசர்மா இசையில் உருவாகியுள்ள இந்த படம் 140 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#AcharyaOnApr29 ❤️??
— Matinee Entertainment (@MatineeEnt) January 31, 2022
Megastar @KChiruTweets @AlwaysRamCharan #Sivakoratala @MsKajalAggarwal @hegdepooja #ManiSharma @KonidelaPro pic.twitter.com/EBooBA9xnT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com