'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2', 'PS1' படங்களை அடுத்து 'துணிவு': அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,November 26 2022]

இந்திய திரையுலகில் சமீபகாலத்தில் மிகப் பெரிய வசூலை குவித்த படங்கள் என்றால் அவை ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப் 2’, ‘PS1’ ஆகிய படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மூன்று படங்களில் ‘PS1’ ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும், ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப் 2’, அகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த 3 படங்களையும் அமெரிக்காவில் ரிலீஸ் செய்த சரிகம சினிமாஸ் என்ற நிறுவனம் தற்போது அஜித்தின் ’துணிவு’ படத்தையும் அமெரிக்காவில் ரிலீஸ் செய்ய உள்ளது. அஜித்தின் ’துணிவு’ படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை சரிகம சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனத்திடமிருந்து சரிகம சினிமாஸ் நிறுவனம் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதை அடுத்து அமெரிக்காவின் முக்கிய திரையரங்குகளை லாக் செய்யும் பணியையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப் 2’, ‘PS1’ படங்களை போல் ‘துணிவு படமும் அமெரிக்காவில் சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.