'ஆர்.ஆர்.ஆர்', 'ஆச்சார்யாவை' அடுத்து இன்னொரு மெகா பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Wednesday,February 02 2022]

கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன

ஏற்கனவே எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி ரிலீசாகும் என்றும் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தற்போது இன்னொரு மெகா பட்ஜெட் படமான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் மார்ச் 11-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் ஜோடியாக ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார் என்பதும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.