ரோலக்ஸை அடுத்து சூர்யாவுக்கு ஒரு செம கேரக்டர்: இயக்குனர் இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Thursday,June 30 2022]

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு அடுத்ததாக வித்தியாசமான செம கேரக்டரை பிரபல இயக்குனர் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற படத்திலும் அதனையடுத்து சுதா கொங்கரா, ஞானவேல் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரின் இயக்கத்தில் படங்கள் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ படங்களை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் சூர்யாவுக்கு விஞ்ஞானி கேரக்டர் என்றும் இந்த கேரக்டருக்கு சூர்யா கச்சிதமாக பொருந்துவார் என்று ரவிக்குமார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

’விக்ரம்’ படத்தை அடுத்து நடிகர் சூர்யா, மாதவனின் ‘ராக்கெட்டரி’ மற்றும் அக்சய் குமார் நடித்து வரும் ’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.