விவசாயிகள் போராட்டம்: நடிகை ரிஹானாவை அடுத்து மேலும் ஒரு நடிகை ஆதரவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே வரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ரிஹானே தனது டுவிட்டரில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பதைப் பார்த்தோம்
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகையை தொடர்ந்து ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை மியா கலிபாவும் தனது ஆதரவை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் ’டெல்லியில் என்ன மாதிரியான மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டு வருகின்றன? போராட்டக்களத்தில் இணையசேவை துண்டித்து விட்டார்களாமே? என தெரிவித்துள்ளார்
மேலும் விவசாயிகள் பணத்துக்காக நடிப்பவர்களா? அப்படி என்றால் விருது வழங்கும் விழாவில் அவர்களின் பெயர்களை பரிசீலிக்கலாமே? என்றும் நான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
விவசாயிகள் போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பெரிய நடிகர்-நடிகைகள் யாரும் ஆதரவு தராத நிலையில் வெளிநாட்டிலுள்ள நடிகர்-நடிகைகள் ஆதரவு தந்து கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
“Paid actors,” huh? Quite the casting director, I hope they’re not overlooked during awards season. I stand with the farmers. #FarmersProtest pic.twitter.com/moONj03tN0
— Mia K. (Adri Stan Account) (@miakhalifa) February 3, 2021
What in the human rights violations is going on?! They cut the internet around New Delhi?! #FarmersProtest pic.twitter.com/a5ml1P2ikU
— Mia K. (Adri Stan Account) (@miakhalifa) February 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments