ஓய்வுக்கு பின் 'தல' தோனி செய்யும் வேலையை பாருங்கள்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பயிற்சியாளராகவும் மாறி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அதேபோல் ஒரு சிலர் அரசியல் கட்சிகளில் இணைந்து எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஆகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி அவர்கள் கிரிக்கெட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அவர் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார் என்பதும் அவரது நிலத்தில் விளைந்த விளை பொருள்கள் அரபு நாடுகள் உள்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி வருகிறது என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் தனது விவசாய பண்ணையில் பணி புரியும் விவசாய தொழிலாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது

அதேபோல் தல தோனி கவனம் செலுத்தும் இன்னொரு விஷயம் கால்பந்து ஆகும். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டும் தோனி ’ஆல் ஸ்டார் ஃபுட்பால் கிளப்’ அணியுடன் விளையாடும் காட்சிகளின் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது. மொத்தத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி தனிப் பாதையில் பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.