ஓய்வு அறிவிப்புக்கு பின் தல தோனியின் முதல் பதிவு: குவியும் லைக்ஸ்கள்!

  • IndiaGlitz, [Friday,January 08 2021]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான தோனி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடே சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் ஓய்வு முடிவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதாவது ஓய்வு முடிவு அறிவிப்புக்கு பின் தற்போது தோனி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தோனி தனது விவசாய பண்ணையில் ஸ்ட்ராபெரி வளர்த்து வருவதும், அதில் உள்ள ஒரு ஸ்ட்ராபெரியை எடுத்து சாப்பிடுவது போலவும் உள்ள காட்சிகள் உள்ளது

இந்த வீடியோவில், ‘இதேபோல் நான் தொடர்ந்து பண்ணைக்கு சென்றால் சந்தைக்கு ஒரு ஸ்ட்ராபெரியும் போகாது என்று அவர் காமெடியாகவும் அதில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் கிரிக்கெட் வர்ணனையாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், நடிகர்களாகவும் மாறி வருகின்றனர். ஆனால் தல தோனி வித்தியாசமாக ஓய்வுக்குப் பின் விவசாயத்தை தேர்வு செய்துள்ளார் என்பதும் அவரது பண்ணையில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

More News

'ஈஸ்வரன்' ரன்னிங் டைம் இவ்வளவுதானா? 8 காட்சிகள் கூட ஓட்டலாம் போல!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என ஏற்கனவே என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

கள்ளச் சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு… அபாயக் கட்டத்தில் இன்னும் பலர்… அதிர்ச்சி சம்பவம்!!!

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் கள்ளச்சாரயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரேநாளில் 2 திருமணம் செய்துகொண்ட மாமனிதர்… டூயட் பாடவும் தயாரான மனைவிகள்!!!

ஒன்னுக்கே வழியில்ல எனப் புலம்பும் 90 ஸ் கிட்கஸ்களுக்கு மத்தியில் விவசாயி ஒருவர் ஒரே நாளில் 2 திருமணம் செய்து கொண்ட விசித்திரம் நடைபெற்று இருக்கிறது.

டாஸ்க்கில் அடித்து கொள்ளும் ஷிவானி-ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க்கில் முதல் இடம் பிடித்து எவிக்சனில் இருந்து தப்பிக்க வேண்டும், இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும்

பள்ளிகளே திறக்காதபோது, திரையரங்கில் 100% அனுமதியா? சென்னை ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி என்ற அரசாணை குறித்த வழக்கு இன்று காலை மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்ற போது