ஓய்வு அறிவிப்புக்கு பின் தல தோனியின் முதல் பதிவு: குவியும் லைக்ஸ்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான தோனி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடே சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் ஓய்வு முடிவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதாவது ஓய்வு முடிவு அறிவிப்புக்கு பின் தற்போது தோனி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தோனி தனது விவசாய பண்ணையில் ஸ்ட்ராபெரி வளர்த்து வருவதும், அதில் உள்ள ஒரு ஸ்ட்ராபெரியை எடுத்து சாப்பிடுவது போலவும் உள்ள காட்சிகள் உள்ளது
இந்த வீடியோவில், ‘இதேபோல் நான் தொடர்ந்து பண்ணைக்கு சென்றால் சந்தைக்கு ஒரு ஸ்ட்ராபெரியும் போகாது என்று அவர் காமெடியாகவும் அதில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பொதுவாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் கிரிக்கெட் வர்ணனையாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், நடிகர்களாகவும் மாறி வருகின்றனர். ஆனால் தல தோனி வித்தியாசமாக ஓய்வுக்குப் பின் விவசாயத்தை தேர்வு செய்துள்ளார் என்பதும் அவரது பண்ணையில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments