ரத்னகுமாரை அடுத்து 'தளபதி 67' படத்தில் இணைந்த மற்றொரு இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் ’விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் இணை இயக்குனராக ஏற்கனவே ’ஆடை’ இயக்குனர் ரத்னகுமார் இணைந்துள்ளதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம். அந்த வகையில் தற்போது ரத்னகுமாரை அடுத்து இயக்குனர் தீரஜ் வைத்தி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சித்தார்த் நடித்த ’ஜில் ஜங் ஜக்’ என்ற திரைப்படத்தை இயக்கிய தீரஜ் வைத்தி ‘தளபதி 67’ படத்தின் காமெடி பகுதியின் வசனங்களை எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் மேனன் உள்பட ஆறு வில்லன்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், த்ரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் என மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments