இது ஒரு கெட்ட கனவாக இருக்க கூடாதா? ராஷ்மிகா, சமந்தாவை அடுத்து பாதிக்கப்பட்ட இன்னொரு நடிகை..

  • IndiaGlitz, [Saturday,December 07 2024]

தற்போதைய நவீன டெக்னாலஜியில் ஒருவரை போலவே இன்னொருவரை ஆபாச வீடியோவாக மாற்றி டிரெண்டாக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக டீப்பேக் என்ற செயலி மூலம் ராஷ்மிகா மற்றும் சமந்தாவின் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோல் இன்னொரு தமிழ் நடிகையின் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

’வரலாறு முக்கியம்’, ’நதிகளில் சுந்தரி யமுனா’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பிரக்யா நாக்ரா. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏஐ டெக்னாலஜி மூலம் போலியாக உருவாக்கப்பட்ட தன்னுடைய வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். ’இது ஒரு கெட்ட கனவாக இருக்க கூடாதா என நினைக்கிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. ஏஐ டெக்னாலஜி மூலம் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

ஏஐ டெக்னாலஜி என்பது பெண்களின் வாழ்க்கையை இப்படி சீரழிக்கும் வகையில் இருக்கக் கூடாது. வக்கிரம் படுத்த சிலர் இந்த வீடியோக்களை தயார் செய்து வெளியிட்டும், அதை சில கயவர்கள் ட்ரெண்ட் செய்யும் புத்தி கொண்ட நபர்களால் நாங்கள் தான் கஷ்டப்படுகிறோம். என்னைப்போல வேறு எந்த பெண்ணும் இதுபோன்ற ஏஐ மூலம் ஆபாச வீடியோக்களால் பாதிக்கப்படாத வகையில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இக்கட்டான நிலையிலும் என்னை நம்பி, அது நான் இல்லை என்று எனக்கு ஆறுதல் கூறிய ரசிகர்களுக்கு நன்றி’ என்று பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

பிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்.. இந்த வாரம் ஒன்றல்ல 2 போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகிறார்

இப்பதான் லவ் மூட் ஸ்டார் ஆச்சு, அதற்குள் எலிமினேஷனா? இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் கூடுதல் விறுவிறுப்பாக இருக்கும்.

அந்த அறிவு கூட இல்லையா அந்த ஆளுக்கு? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தக விழாவில் மன்னராட்சி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் அர்ஜுனா பேசியதற்கு, "அந்த அறிவு கூட இல்லையா அந்த ஆளுக்கு?"

இரண்டே நாளில் 'புஷ்பா' படத்தின் லைஃப் டைம் வசூல்.. 'புஷ்பா 2' செய்த சாதனை..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அந்த வசூலை இரண்டே நாட்களில் 'புஷ்பா 2' திரைப்படம் செய்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு டீ குடிக்கிறீங்களா சார்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' டீசர்..!

சசிகுமார் மற்றும் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடிக்கும் 'டூரிஸ்ட் பேமிலி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்,