ராஷ்மிகா மந்தனாவை அடுத்து 'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்னரே ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் நாயகியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யின் படத்தில் முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன் ஆகியோர் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Welcoming onboard our darling music director @MusicThaman #Thalapathy66@actorvijay @directorvamshi @iamRashmika #ThamanJoinsThalapathy66 pic.twitter.com/fP3M29kcPJ
— Sri Venkateswara Creations (@SVC_official) April 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com