ராம்சரண் தேஜாவை அடுத்து மேலும் ஒரு பிரபலம்.. 'லியோ'வில் என்ன தான் நடக்குது..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படம் ஏற்கனவே ஒரு மல்டி ஸ்டார் படம் என்ற நிலையில் அவ்வப்போது மேலும் சில பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலை அடுத்து ’லியோ’ படத்தில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
’லியோ’ படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், த்ரிஷா, பிரியாமணி, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் மட்டுமின்றி பான் - இந்திய படமாகவும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டர் போல் ஒரு கேரக்டரில் ராம்சரண் தேஜா நடித்து வருவதாகவும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை சற்று முன் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்திகளின்படி இந்த படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தெரிகிறது. ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் மேலும் பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து கொண்டே வருவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout