close
Choose your channels

ரக்சிதாவை அடுத்து புத்தம் புது கார் வாங்கிய 'பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. வைரல் புகைப்படங்கள்..!

Monday, April 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா, தமிழ் புத்தாண்டு தினத்தில் புத்தம் புதிய கார் வாங்கினார் என்பதும், அப்போது அவரது நெருங்கிய தோழி ஷிவின் உள்பட பலர் இருந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு போட்டியாளர் தனது குடும்பத்துடன் சென்று புத்தம் புதிய கார் வாங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் அமுதவாணன். இவர் இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதி வரை தாக்குப் பிடித்து இருந்தார் என்பதும் அதன் பிறகு 11 லட்சத்து 75 ஆயிரம் பணப்பெட்டியோடு வெளியேறினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அமுதவாணன் குடும்பத்துடன் சென்று மாருதி சுசுகி கார் வாங்கி உள்ளார். இந்த காரின் விலை ரூபாய் 8 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்தினருடன் சென்று கார் வாங்கிய புகைப்படங்களை அமுதவாணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை வென்ற அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment