ரக்சிதாவை அடுத்து புத்தம் புது கார் வாங்கிய 'பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா, தமிழ் புத்தாண்டு தினத்தில் புத்தம் புதிய கார் வாங்கினார் என்பதும், அப்போது அவரது நெருங்கிய தோழி ஷிவின் உள்பட பலர் இருந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு போட்டியாளர் தனது குடும்பத்துடன் சென்று புத்தம் புதிய கார் வாங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் அமுதவாணன். இவர் இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதி வரை தாக்குப் பிடித்து இருந்தார் என்பதும் அதன் பிறகு 11 லட்சத்து 75 ஆயிரம் பணப்பெட்டியோடு வெளியேறினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அமுதவாணன் குடும்பத்துடன் சென்று மாருதி சுசுகி கார் வாங்கி உள்ளார். இந்த காரின் விலை ரூபாய் 8 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்தினருடன் சென்று கார் வாங்கிய புகைப்படங்களை அமுதவாணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை வென்ற அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன் 2' புரமோஷனில் 'லியோ' குறித்து பேசிய த்ரிஷா.. ரசிகர்கள் உற்சாகம்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்தின்

எஸ்ஜே சூர்யாவுக்காக கேக் வெட்டி கொண்டாடிய 'மார்க் ஆண்டனி' படக்குழுவினர்: ஏன் தெரியுமா?

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வரும்  'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று எஸ்ஜே சூர்யாவுக்காக படக்குழுவினர் கேக் வெட்டி

சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்': நீண்ட இடைவெளிக்கு பின் மாஸ் அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்..!

சியான் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் இடையில் சில ஆண்டுகளாக கிடப்பில்

சித்தார்த் - அருண்குமார் படத்தின் டைட்டில்-பர்ஸ்ட் லுக் அறிவிப்பு..!

நடிகர் சித்தார்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை சித்தார்த் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷின் 50வது படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் அவரது நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.