ராஜூ, பிரியங்காவை தொடர்ந்து 3வது இடத்திற்கு முந்தும் போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 100 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்கள் என்பதும் இவர்களில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆக வரும் ஞாயிறன்று அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வாரம் பதிவு செய்யப்படும் வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்கு பெற்றவர் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வந்த தகவலின் படி ராஜூ மிக அதிகமாக வாக்குகள் பெற்று உள்ளார் என்பதும் அவருக்கு அடுத்த இடத்தில் பிரியங்கா உள்ளார் என்பதும், ஆனால் அதே நேரத்தில் ராஜூவுக்கும் பிரியங்காவுக்கும் இடையிலான வித்தியாசம் மிக அதிகமாக இருப்பதால் ராஜூ தான் டைட்டில் வின்னர் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது இடத்திற்கு மிகவும் ஆச்சரியமாக பாவனி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பதினோரு முறை நாமினேஷனில் சிக்கி அனைத்திலும் தப்பித்து வந்து உள்ள பாவனி, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாவனியை அடுத்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் நிரூப் மற்றும் அமீர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com