ரஜினியை அடுத்து விநியோகிஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுத்த மாஸ் நடிகர்: எத்தனை கோடி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’பாபா’ ’லிங்கா’ உள்பட ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தபோது விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுத்ததாக தகவல் வெளியானது. அந்த வகையில் தற்போது ரஜினிக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் விநியோகிஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ‘பிரின்ஸ்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படுதோல்வி அடைந்தது என்பதும் இதனால் விநியோகிஸ்தர் கடுமையான நஷ்டம் அடைந்தார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 3 கோடி ரூபாயும், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 3 கோடி ரூபாயும் என மொத்தம் ஆறு கோடி ரூபாய் ’பிரின்ஸ்’ படத்தின் இழப்பீடாக விநியோகிஸ்தருக்கு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’பிரின்ஸ்’ படத்தின் தோல்வியை அடுத்து சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments