ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி பிசினஸ்.. ரஜினிக்கு அடுத்து சூர்யா தான்: சொன்னது யார் தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,February 28 2024]
சூர்யாவின் அடுத்த படம் ரிலீசுக்கு முன்பே 100 கோடி ரூபாய் பிசினஸ் செய்து விட்டதாகவும் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடுத்து சூர்யாவின் படம் தான் அதிக பிசினஸ் செய்திருப்பதாகவும் ’கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ’ரஜினி அவர்களுக்கு அடுத்து அதிகமாக பிசினஸ் செய்யக்கூடிய படம் என்றால் அது சூர்யா அவர்களின் படம்தான் என்றும் ’கங்குவா’ படத்தின் தயாரிப்பாளராக இந்த படம் ரிலீசுக்கு முன்பே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஓடிடியில் பிசினஸ் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நம்பர் ஒன் நடிகர் என்பது வாங்கும் சம்பளத்தை வைத்து அல்ல, அந்த நடிகரின் படம் வசூல் செய்யும் தொகையை பொறுத்து தான், தயாரிப்பாளர் லாபமா அடைவதற்கு எந்த நடிகர் காரணமோ அவர்தான் நம்பர் ஒன் நடிகர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஊடகங்கள் பொய்யான வசூல் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் வசூல் தகவல் குறித்த விஷயங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து அதன் பின் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
• Suriya Touched (100 CR) Pre Business in 2017 Itself Non - Rajini Record on that time 🔥#Kanguvapic.twitter.com/BKtKpelO8m
— ₮Ⱨ₳₦J₳ł ₳ⱤɄ₦ (@Arun_SFC_49TN) February 28, 2024