நேற்று ரஜினி, இன்று கமல்: அஜித் பட இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும், ரஜினியின் அடுத்த படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளார் என்பதும், ‘லால் சலாம்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தை லைகா தயாரிக்கவிருப்பதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று ரஜினி பட அறிவிப்பு வெளியான நிலையில் இன்று கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த அறிவிப்பு கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஜீத் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கிய இயக்குனர் எச்.வினோத், கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த அறிவிப்பு தான் இன்று மாலை வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’இந்தியன் 2’ படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படம் எது என்பதை அறிய அவரது ரசிகர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே ஆர்வத்துடன் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#RKFIActionBeginsat6PM tomorrow ! #Ulaganayagan #KamalHaasan #RKFIActionBegins @turmericmediaTM pic.twitter.com/3fIpUyDdXa
— Raaj Kamal Films International (@RKFI) November 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments