ரஜினியை அடுத்து ஜப்பானில் வெளியாகும் கார்த்தியின் சூப்பர்ஹிட் படம்!

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் மற்றும் பல நாடுகளிலும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜப்பான் நாட்டில் ரஜினியின் படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியை அடுத்து தற்போது கார்த்தியின் சூப்பர் ஹிட் படமும் ஜப்பானின் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானில் மிக அரிதாகவே தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது கார்த்தியின் ’கைதி’ திரைப்படம் ஜப்பானில் வரும் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஆக்ஷன், சென்டிமெண்ட் ஆகியவை கலந்த கொரிய மொழி படம் போல் ’கைதி’ இருப்பதால் இந்த படத்தை ஜப்பான் மக்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’கைதி’ திரைப்படம் ஏற்கனவே தமிழகத்தில் சூப்பர் ஹிட்டாகி நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முயற்சிகள் படக்குழுவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது