ரஜினியை அடுத்து நெல்சனுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்.. வேற லெவல் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 500 கோடி ரூபாய் வசூல் தாண்டி 600 கோடியை நெருங்கிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து லாபத்தில் ஒரு பகுதியை ரஜினிகாந்த் அவர்களுக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கொடுத்தார். அதுமட்டுமின்றி அவருக்கு பிஎம்டபிள்யூ ஆடம்பர கார் ஒன்றையும் கொடுத்தார். இந்த காரின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ரஜினியை அடுத்து இயக்குனர் நெல்சனுக்கு கலாநிதி மாறன் அவர்கள் டபுள் சர்ப்ரைஸ் கொடுத்தார். நெல்சனுக்கு போர்ச்சி என்ற ஆடம்பர காரை பரிசளித்த கலாநிதி மாறன் அவருக்கு ஒரு மிகப்பெரிய தொகையை செக்காகவும் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் கலாநிதி மாறன் சிறப்பு பரிசு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mr.Kalanithi Maran congratulated @Nelsondilpkumar and handed over a cheque to him, celebrating the Mega Blockbuster #Jailer #JailerSuccessCelebrations pic.twitter.com/b6TGnGaFd6
— Sun Pictures (@sunpictures) September 1, 2023
Thank u very much Mr #kalanithimaran sir for being so generous and gifting me this beautiful car for the success of #jailer really proud and happy to have been associated with u and the cheque was really an add on surprise ❤️🤗🙏 @rajinikanth sir ❤️🤗 @sunpictures 🙏 https://t.co/4ks416fufN
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) September 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments